இனிமேல் ‘செல்பி’ எடுக்க முடியாது! மத்திய அரசு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ எடுப்பதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுலா தலங்களில் உள்ள ஆபத்தான இடங்களை கண்டறிந்து, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும், அங்கு 'செல்பி' எடுப்பதை தடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளிடம், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலா பயணியர், ஆபத்தான இடங்களில், 'செல்பி' எடுக்கும்போது, தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் நீர் வீழ்ச்சி, ஆபத்தான மலை உச்சி போன்ற சுற்றுலா தலங்களில் ஆர்வத்துடன் செல்போனில் ‘செல்பி’ புகைப்படம் எடுத்து வருகிறார்கள். அந்த சமயத்தில் தடுமாற்றத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார்கள்.

சுற்றுலா தலங்களில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்காக மத்திய அரசு, மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘செல்பி’ விபத்து ஏற்படும் இடங்களில் ‘செல்பி’ எடுக்க ‘தடை விதிக்கப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அகிர் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Governments action for Selfie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->