இந்தியாவை உலுக்கிய பாலியல் சம்பவத்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது மத்தியரசு.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற இளம் பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

நிர்பயாவை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றம் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அந்த சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மீதமிருந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறையிலையே தற்கொலை செய்து கொண்டான். மற்ற நான்கு குற்றவாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை குறைக்க கோரி உச்சநீதிமன்றத்திலும் டெல்லி ஆளுநரிடத்திலும் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார். 

இதையயடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் நான்கு பேர் சார்பிலும் கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மாவை தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கருணை மனுவை நிராகரித்து உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் நிர்பயா வழக்கில் சம்பந்தபட்ட நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government has confirmed the death penalty for sexual assault


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->