#BIGBREAKING : சற்றுமுன் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆதார் கார்டை வைத்துகொண்டு இனி வெளிநாடு செல்லலாம்!!  - Seithipunal
Seithipunal


இந்திய அரசின் அடையாள அட்டைகளுள் ஒன்றான ஆதார் அட்டையை வைத்துக்கொண்டு இனி நமது அண்டை நாடான நேபாளம் மற்றும் பூடானுக்கு விசா இன்றி செல்லலாம் என  உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

நமது அண்டை நாடான பூடான் மற்றும் நேபாளம் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இந்திய அரசால் வழங்கப்பட்ட  கடவுசீட்டு மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் போதும். 

இதுவரை 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பயண சான்றாக வைத்து பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில், ஆதார் அட்டையையும், பயண சான்றாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதே நேரத்தில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர மற்ற வயதினர், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது. 

இந்தியாவை சேர்ந்த 6 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்தில் வசிக்கின்றனர். 15 வயது முதல் 18 வயது உடையவர்கள், இந்தியா, நேபாளத்தில் பயணம் மேற்கொள்ள, அவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் அளிக்கும் அடையாள சான்றை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government Aadhaar card


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->