#கேரளா || அதி வேகத்தில் வந்த சொகுசு கார் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து.! ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் அதிவேகத்தில் வந்த சொகுசு கார் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரளா கொண்டோட்டி பகுதியிலிருந்து கைத்தக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் பனமரம் பகுதியின் அருகே கட்டுப்பாட்டை இழந்ததால், எதிரே வந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் ஒருவர் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car three twowheeler accident in Kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->