#கேரளா || அதிவேகத்தில் வந்த கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்து.! ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் அதிவேகத்தில் வந்த கார் எதிரே வந்த பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புறத்தில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று லாரியை முந்த முயன்றபோது கொண்டோட்டி-முறையூர் சாலையில், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பைக்கில் வந்த இருவரும் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மற்றொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car bike accident in Kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->