முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


ஏழு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையம் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிழக்கு அந்தேரி தொகுதியும், பீகார் மாநிலத்தில் மோகாம் மற்றும் கோபால்காஞ்ஜி ஆகிய இரு தொகுதிகளுக்கும், ஹரியானா மாநிலத்தில் அடம்பூர் தொகுதிக்கும், தெலுங்கானா மாநிலத்தில் முனுகோட் தொகுதிக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோலோ கோக்ரன்நாத் தொகுதிக்கும், ஒடிசா மாநிலத்தில் தாம்நகர் தனித்தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வேட்பு மனு தாக்கல் ஆனது அக்டோபர் 7ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 14ஆம் தேதி, வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும்.

வேட்பு மனு திரும்ப பெற அக்டோபர் 17ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அதன் முடிவுகள் நவம்பர் 8ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

By election date announcement for seven constituencies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->