இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.! - Seithipunal
Seithipunal


மூன்று நாள் அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாங்காக் நகரில் நடைபெறும் கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் மோடி பங்கேற்க உள்ளார்.

மேலும், ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளும், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து போன்ற 6 நாடுகளும் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார். இந்த 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆர்செப் (RCEP) என அழைக்கப்படும், இந்த ஒப்பந்தம் இன்றைய உச்சி மாநாட்டில் இறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. 

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வந்தாலும், இந்திய உள்நாட்டு தொழில்துறையை பாதுகாப்பது, சீனப் பொருட்கள் குவிக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதை தொடர்ந்து, பாங்காக்கில் நடைபெறும் இன்றைய உச்சி மாநாட்டில் எந்த மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, 2020ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் ஆர்செப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உறுதிபூண்டிருப்பதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.                                                                    
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

business between india china and 16 other countries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->