78,500 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வு..! அதிர்ச்சியாக்கும் பகீர் காரணங்கள்.!!
BSNL and MDNL employee apply job VRS
பி.எஸ்.என்.எல் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமாக விலகி வரும் நிலையில், கடுமையான நஷ்டத்தோடு இயங்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட பொருளதார சிக்கலில் இருந்து தப்பிக்க, விருப்ப ஓய்வு பெரும் நபர்களுக்கு வி.ஆர்.எஸ் திட்டத்தினை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு 50 வயதிற்கும் அதிகமாக உள்ள ஊழியர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 78 ஆயிரத்து 500 ஊழியர்கள் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு பி.எஸ்.என்.எல் நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நேற்று இவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு தொடர்பான விண்ணப்பத்தை அளித்துள்ளனர். இதன் காரணமாக பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கு பாதியளவு குறைந்துள்ளது.
இவர்களோடு சுமார் 6 ஆயிரம் பேர் பணிக்காலம் நிறைவு பெற்று ஓய்வு பெறுகின்றனர். ஊழியர்களின் சம்பள செலவு வருடத்திற்கு ரூ.2 ஆயிரத்து 272 கோடி பிடித்த நிலையில், இனிவரும் காலத்தில் இது ரூ.500 கோடியாக குறைகிறது.
இதனைப்போன்று விருப்ப ஓய்வில் செல்லும் நபர்களுக்கு 40 மாத மொத்த சம்பளத்தில் இருந்து 125 விழுக்காடு கணக்கிடப்பட்டு இழப்பீடும் வழங்கப்படவுள்ளது. இதற்க்காக ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் வி.ஆர்.எஸ் அளிக்கப்படவுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு பணிகொடையாக ரூ.17 ஆயிரத்து 169 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், ஓய்வூதிய செலவுக்கு ரூ.12 ஆயிரத்து 678 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதிகள் உடைய பணியாளர்ளுக்கு பணி நிறைவு போட்டதும் வருடத்திற்கு 35 நாட்கள் சம்பளத்தோடு சமமான தொகை, மீதமுள்ள பணிக்காலத்திற்கு வருடத்திற்கு 25 நாட்கள் சம்பளத்துடன் சமமான தொகை மற்றும் பணிக்கொடை வழங்கப்படவுள்ளதாக பி.எஸ்.என்.எல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விருப்ப ஓய்விற்கு பின்னரும் பி.எஸ்.என்.எல் பணியாளர்கள் 85 ஆயிரம் ஊழியர்கள் இன்னும் இருப்பதாகவும், என்ஜீனியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சேவையின் தரம் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று எம்.டி.என்.எல் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்த 14 ஆயிரத்து 378 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் மீதமுள்ள 4 ஆயிரத்து 430 ஊழியர்களுடன் எம்.டி.என்.எல் நிறுவனம் இயங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
BSNL and MDNL employee apply job VRS