கூகுள் மேப் உதவியுடன், காதலியை சந்திக்க பாகிஸ்தான் பயணம்.. எல்லையில் ஏற்பட்ட விபரிதம்.. அதிர்ச்சியில் காவல்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


மகராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் முகமது சித்திக் என்பவர் தனது மகன் சித்திக் முகமது ஜிஷானை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மகாராஷ்டிரா காவல்துறையினர், சித்திக் முகமது ஜிஷானின் மொபைல் டவர் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான டொலவிரா கிராமத்தை காட்டுவதாக கண்டுபிடித்தனர். இதை அடுத்த மகாராஷ்டிரா காவல்துறையினர் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

குஜராத்தின் வழியாக ஜிஷான் பாகிஸ்தானை அடைய திட்டமிட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு எல்லைப்பகுதி நெருங்கும் முன்பு ஜிஷான் விட்டுச்சென்ற, அவரது இருசக்கர வாகனத்தை பாசில் பார்க் என்னுமிடத்தில் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையை அடைந்ததற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் முன்பாகவே பகுதியில் வறட்சியால் சோர்வடைந்து, சுயநினைவின்றி 2 மணிநேரம் இருந்துள்ளார். 

கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் பயணம் செய்த அப்பகுதி சென்றடைந்து உள்ளார். ஜிஷானை முகாமுக்கு அழைத்து வந்தேன் பி.எஸ்.எப் வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். பேஸ்புக் மூலம் அறிமுகமான சம்ரா என்னும் பெண்ணை காதலிப்பதாகவும், அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஷாஆஹ் ஃபைசல் டௌன் எனும் இடத்தில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் செல்லவுள்ளதாகவும், கூகுள் மேப் உதவியுடன் அங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy friend travel to pakistan to meet girlfriend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->