மணமகனுக்கு இப்படியொரு வரதட்சணையா? அழிக்கமுடியாத சொத்தால், இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய புதுமாப்பிள்ளை!! - Seithipunal
Seithipunal


தற்காலத்தில் திருமணங்களில் வரதட்சணை வாங்குவது என்பது தலைதூக்கிய பெரும் பிரச்சினையாக உள்ளது. மேலும் பல இடங்களில் கோடிக்கணக்கில் மணப்பெண்களுக்கு வரதட்சணைய கொடுத்தாலும் பல இடங்களில் வரதட்சனை கொடுக்க முடியாமல் பாதியிலேயே நின்ற திருமணங்களும் ஏராளம்.

இந்நிலையில். அனைவருக்கும் முன்னுதாரணமாக பள்ளி ஆசிரியர் ஒருவர் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சூர்யங்கட்டா பாரீக்.இவர் பள்ளி ஆசிரியராக உள்ளார்.இந்நிலையில் இவருக்கும் பிரியங்கா பாஜ் என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே சூர்யங்கட்டா பெண் வீட்டாரிடம் தனக்கு எந்த வரதட்சணையும் நீங்கள் தர வேண்டாம். அவ்வாறு நீங்கள் கொடுத்தாலும், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

இந்நிலையில் தங்களது மகளுக்கு ஏதாவது வழங்கவேண்டும் என ஆசைப்பட்ட ப்ரியங்காவின் குடும்பத்தினர் 1 லட்சம் மதிப்புள்ள 1000 புத்தகங்களை பரிசாக அளித்து பெருமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து மணபெண்ணின் குடும்பத்தார்கள் கூறுகையில், மணப்பெண்ணுக்கு புத்தகம் படிப்பது என்பது மிகவும் பிடிக்கும். மேலும் புத்தகங்கள் தான் நமக்கு அறிவு செல்வத்தை வளர்க்கும். மேலும் அறிவு மட்டுமே என்றும் அழிக்க முடியாத சொத்து. எனவேதான் புத்தகத்தை பரிசாக அளித்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த வித்தியாசமான பரிசுகள் மணமகனுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

books gave as dowry to new honest groom


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->