சீனாவிற்கு ஆப்படிக்க களமிறங்கிய அடுத்த அல்டிமேட் விமானம்.. கலக்கும் இந்தியா.! - Seithipunal
Seithipunal


இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உலாவி வரும் சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு எமனாக விளங்கும் பி 8 ரக போர் விமானத்தில், ஒன்பதாவது போயிங் விமானம் கோவா வந்தடைந்துள்ளது. நீருக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை கண்டு, அவற்றை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் இந்த விமானங்களுக்கு உள்ளது. இது போன்ற 8 விமானங்கள் ஏற்கனவே இந்தியாவிடம் உள்ளது. 

இவை கடற்படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தற்போது 4 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், முதல் விமானம் தற்போது வந்து சேர்ந்துள்ளது. இதனைத்தவிர்த்து மேலும் 6 போர் விமானங்களும் வாங்கப்பட உள்ளது. 

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், இன்னும் சில ஆண்டுகளில் மொத்தமாக 22 பி 8 ரக போர் விமானங்கள் கடற்படையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், அங்கு உள்ள எல்லைப் பகுதிகளிலும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boeing B 8 Warplane Arrived Goa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->