ஒண்ணு கூடறீங்களா நீங்க..? சேந்தாப்ல முடிச்சு விட்ட பா.ஜ.க - ஆழமாக இறக்கப்பட்ட கத்தி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் இருபெரும் மாநில கட்சிகளான சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் பா.ஜ.க.வின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

தமிழகத்தில் எப்படி திராவிட இயக்கங்கள் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறதோ அதேபோல் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இரு பெரும் மாநில கட்சிகளாக கருதப்பட்டன.

அங்கு மாறி மாறி இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்த நிலையில் இத்தேர்தலில் முதல் முறையாக இரு எதிரிகளும் ஒன்றாக கைகோர்த்து பா.ஜ.க.வை எதிர்த்து நின்றார்கள்.

ஆனால் பலம் வாய்ந்த அந்த கூட்டணியை பா.ஜ.க. மிக எளிதில் தூக்கி எறிந்து மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை எல்லாவற்றையும் விட மேற்கு வங்கத்தில் காலூன்ற முடியாத ஒரு நிலையில் இருந்த பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரசுக்கு நிகராக இத்தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றிருப்பது அக்கட்சியின் மீது மேற்கு வங்க மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது.

மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்திருக்கிறது. குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகும். அங்கு பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp wins most of north india


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->