திரிணமூல் காங்கிரஸின் கோட்டையில் ஓட்டையை போட்ட பாஜக; ஃபால்டா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்வாரியாக வெற்றிபெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.  இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஃபால்டா சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஃபால்டா தொகுதியில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த தொகுதியில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மறுவாக்குப்பதிவு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்த தொகுதியில், பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக, சிபிஎம் வேட்பாளர் ஷம்புநாத் குர்மி 40,600க்கும் அதிக வாக்குகளைப் பெற்று இரணடாம் இடமும், காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் மொல்லா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஜஹாங்கீர் கான் 7,700க்கும் மேற்பட்ட வாக்குகளுடன் படுதோல்வியடைந்து நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முடிந்த மேற்கு வங்க தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட  ஃபால்டா தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் 04 வது தள்ளப்பட்டுள்ளமை அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Candidate Scores Resounding Victory in Falta Bypoll


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->