பாஜகவிற்கு புதிய தலைமை! டெல்லியில் அதிகாரபூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் புதிய எம்பிக்களோடு முதல் கூட்டமானது இன்று ஆரமபம் ஆனது. புதிய எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிறகு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜகவின் தலைவராக அமித் ஷா தொடர்வார் எனவும், அகில இந்திய தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார். 

பாஜகவில் இரட்டை பதவிகள் வகிக்க கூடாது என்பதால், உள்துறை அமைச்சராக பதவியேற்ற அமித் ஷா தேசிய தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்ததாகவும், ஆனால் அவரது தலைமையில் அதிகப்படியான வெற்றிகளை குவித்து உள்ளதாலும், விரைவில் சில மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் வரும் டிசம்பர் வரை அமித் ஷாவே தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

BJP appoint new national working president


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal