"ஒரு உயிரை கூட இழக்க தயாரா இல்ல.. வேலையை பாருங்க." சோனியா காந்தியை வறுத்து கொட்டிய பாஜக.!  - Seithipunal
Seithipunal


வைரஸ் தொற்று நோயானா கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுதலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் 21 நாட்கள் நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பினால் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். 

இருந்தாலும் மக்களின் உயிர் தான் மிக முக்கியம் என இந்த 144 தடை உத்தரவை அமல்படுத்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தியதனால் மக்கள் குழப்பம் அடைந்து உள்ளார்கள் என காங்கிரஸ் தலைவர்.சோனியா காந்தி கூறினார். 

இதற்கு பதிலடி கொடுத்த தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் என் பி சுபாஷ் இதுபற்றி, "சோனியா காந்தி எதற்காக இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து வருகிறார். என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 

இத்தாலி நாட்டில் கொரோனா வைரசுக்கு சுமார் 12000 பேர் பலியாகி உள்ளனர். அப்படி இருக்கையில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிலும் அதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடக்க வேண்டும் இன்று அவர் விரும்புகிறாரா..? 

நாடு தழுவிய ஊரடங்கு செயல்படுத்தவில்லை என்றால் இந்த கொரோனாவால், ஏற்படும் உயிர் சேதத்திற்கு அவர் பொறுப்பேற்பாரா..? 

நல்லதொரு காரணத்திற்காக நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp angry about Sonia ganthi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->