பறவை காய்ச்சல்: கேரளாவை தொடர்ந்து 500 கோழிகள் ஒரே நேரத்தில் இறந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

பறவை காய்ச்சல் மனிதர்களையும் தாக்கலாம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலால் அங்குள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள வாத்துகள் அதிகளவு அடுத்தடுத்து இறந்துள்ளது. 

பறவைக்காய்ச்சலை மாநில பேரிடராக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் அதிகளவு வாத்துகள் இறந்ததை தொடர்ந்து மாநில பேரிடராக அறிவிப்பதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 500 கோழிகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை அறிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான பலியான கோழிகளின் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bird flu issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->