பொதுப்பெட்டியில் இடம் பிடிக்க புதிய திட்டம்!! வெளியான அறிவிப்பு!!  - Seithipunal
Seithipunal


பொது பெட்டியில் பயோமெட்ரிக் மூலம் இடம் பிடிக்கும் முறை நீண்ட தூர ரயில் பயணங்களுக்காக விரைவில் அமலுக்கு வர இருக்கின்றது. முன்பதிவு இல்லாத பொது ரயில் பெட்டியில் இடம்பெறுவதில் அடிதடி, தள்ளுமுள்ளு ஆகியவை தொலை தூர ரயில் பயணத்தின்போது நடக்கின்றது.

அதீத கூட்டத்தினால் சிலர் படிக்கட்டிலும், சிலர் கூரை மீதும் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். மேலும், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளி உள்ளிட்ட சிலருக்கு லஞ்சம் கொடுத்து பொது பெட்டியில் இருக்கைப் பிடித்து வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

இதனை தவிர்க்க ரயில்களில் பயோ மெட்ரிக் எனும் திட்டத்தை அமல்படுத்த மும்பை மற்றும் லக்னோ இடையே பயணிக்கும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்படி சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியில் பதிக்கப்பட்டிருக்கும் பயோமெட்ரிக் முறையில் யாரும் முதலில் கைவைக்கின்றாரோ அவர்களுக்குத்தான் அந்த இருக்கை.

மேலும், பொதுப்பிரிவு ரயில் பெட்டியில் எத்தனை பயணிகளுக்கு அனுமதி உண்டோ அத்தனை பயணிகள் மட்டுமே அதில் கை ரேகை பதிந்து பயணிக்க முடியும். இந்த திட்டத்தை பிற வழித்தட தொலைதூர ரயில்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biometric system in train


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->