சானிடைசரால் பைக்கை சுத்தம் செய்கையில் தீடீர் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் இரு சக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்த நிலையில், திடீரென இரு சக்கர வாகனம் முழுவதும் தீப்பற்றி எறிந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் அரவிந்த் மில் செயல்பட்டு வருகிறது. 

இந்த தொழிற்சாலைக்கு வரும் ஊழியர்களின் வாகனத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலைக்கு உள்ளே அனுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று வழக்கம்போல வரும் வாகனத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த நபரின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. திடீரென தீப்பற்றியதும் அதிர்ச்சியடைந்த நபர் பைக்கை கீழே போட்டு சென்றார். அருகில் இருந்த ஊழியர்கள் தீயில் இருந்து வாகனத்தை அப்புறப்படுத்தினர். 

மேலும், இந்த வாலிபர் அதிக தொலைவு பயணம் செய்து தொழிற்சாலைக்கு வந்த நிலையில், எஞ்சினின் சூடு காரணமாக இது நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bike fired when spray sanitizer in Gujarat Ahmadabad


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->