தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு?..! கொண்டாட்டத்தில் மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


கார்ப்பரேட் மீதான வரிவிகிதத்தை குறைந்துள்ள மத்திய அரசானது.,  தனிநபரின் வருமான வரி விகிதத்தையும் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உள்நாட்டு உற்பத்தியாளர்களின் கார்ப்பரேட் வரி விகிதத்தை 30 விழுக்காடு முதல் 22 விழுக்காடு வரை குறைப்பதாக தெரிவித்தார். 

மேலும்., புதிதாக உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு வட்டி விகிதமானது 25 விழுக்காடு முதல் 15 விழுக்காடாக குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய தர வர்த்தகத்தினருக்கு நுகர்வினை அதிகரித்து., பொருளாதார வளர்ச்சியை ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வருமான வரி விதிப்பு மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

income tax, வருமான வரி, வருமான வரித்துறை,

தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரி சட்டத்தினை மறு ஆய்விற்கு உட்படுத்தி., இந்தியாவின் பொருளாதார தேவைக்கு ஏற்றார் போல இருக்கும் புதிய சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க., நேரடி வரி தொடர்பு பணிக்குழு கடந்த 2017 ஆம் வருடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவானது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 19 ஆம் தேதியன்று மத்திய அரசு அறிக்கையொன்றை தாக்கல் செய்தது. 

இந்த அறிக்கையில்., வருமான வரிவிதிப்பின் அடுக்குகளை நான்கில் இருந்து ஐந்தாக உயர்த்துவது குறித்தும்., சில அடுக்கு வருமானவரியை குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனடிப்படையில்., சட்டங்களை எளிமைக்குதல்., வரி விகிதத்தை குறைப்பது குறித்து ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

மேலும்., வருமான வரியை செலுத்தும் நபர்களுக்கு 5 விழுக்காடு அளவிலான பயன்படும் வகையில் மாற்றம் இருக்கும் என்று தகவல்களும் வெளியான நிலையில்., ரூ.2.5 இலட்சம் வருமானத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு வாரியானது விதிக்கப்டுவதில்லை. ரூ.3 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை உள்ள வருமான நபர்களுக்கு., 5 விழுக்காடு அளவிற்கான வாரியானது விதிக்கப்படுகிறது. 

income tax, வருமான வரி, வருமான வரித்துறை,

ரூ.5 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை வருமானம் இருக்கும் நபர்களுக்கு 10 விழுக்காடு அளவிலான வாரியானது விதிக்கும் வகையில் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும்., உயர் வருவாய் பிரிவின் வருமான வரி அடுக்கு 30 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக குறைப்பது., மேல்வரி மற்றும் கூடுதல் வரிகளை நீக்குவது போன்ற திட்டம் பரிசீலனையில் உள்ளது. 

இந்த பரிசீலனை நிறைவு பெற்று., வரும் தீபாவளிக்கு முன்னதாக வருமான வரி விதிப்பு மாற்றங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நுகர்வு அதிகரித்து., வளர்ச்சியானது அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

before Deepawali central govt reduce income tax


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->