பிரதமர் நிவாரண நிதி! பிசிசிஐ அளித்த தொகை எவ்வளவு தெரியுமா! திட்டி தீர்க்கும் இணையவாசிகள்!  - Seithipunal
Seithipunal


உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் அதனுடைய தீவிரத்தை தற்பொழுது காட்டி வருகிறது. தற்போதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆனது ஆயிரத்தை நெருங்கி  இந்தியாவை அதிர வைத்துள்ளது. 

இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரமாக எடுத்துவருகிறது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. நாட்டில் உள்ள பொது மக்களிடத்தில் அனைவரிடத்திலும், பிரதமர் நிவாரண நிதி கேட்டு இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியினை அளித்து வருகிறார்கள். 

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் பணக்கார அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 51 கோடி ரூபாய் பணத்தை பிரதமர்
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பணக்கரா கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ 51 கோடி மட்டுமே அறிவித்தையடுத்து இணையவாசிகள் பலரும் #ShameOnBCCI என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI donates 51 crore to PMcareFund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->