பெண்களை மிக ஆபாசமாக பேசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்.! அதிரடி அபராதம் விதித்த பிசிசிஐ!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் தொலைக்காட்சியில் பிரபல இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அப்போது அவர்களிடம் பெண்கள் குறித்து எழுப்பபட்டகேள்விக்கு அவர்கள் மிகவும் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பிசிசிஐ நிர்வாக குழு இவர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பியது மேலும்  இருவரையும் இடைநீக்கம் செய்தது .அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்தும் அவர்கள்  நீக்கப்பட்டனர்.

 அதனை தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் இருவருக்கும் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பணியில் இருந்தபோது வீரமரணமடைந்த 10 துணை இராணுவப் படையினர் குடும்பத்திற்கு  தலா ஒரு லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் மேலும் மீதி 10 லட்சம் ரூபாயை மாற்றுத்திறனாளி  கிரிக்கெட் அமைப்பை மேம்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதனை கிரிக்கெட் வீரர்கள் இருவரும்  4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

bcci announced 20 lakhs benality for pandya and ragul


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal