கார் பேனட்டில் சிக்கிய ஓட்டுனரை 1 கி.மீ தூரம் இழுத்துச்சென்ற பெண்! - Seithipunal
Seithipunal


பெங்களூர் : விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பெண்ணை தட்டி கேட்ட நபரை, காரின் பேனட்டில் வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் இருசக்கர வாகனத்தில் முதியவரை தரதரவென இரண்டு கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது அதே போன்று ஒரு மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய காரை விட்டு பெண் ஓட்டுனர் இறங்குமாறு, பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, அந்தப் பெண் திடீரென காரை எடுத்து முன்னோக்கி செல்ல முயன்றுள்ளார். 

அந்த பெண்ணை தடுத்து நிறுத்துவதற்காக காரின் பேனட்டில் மீது அவர் ஏறி அமர்ந்துள்ளார். இதனைப் பொருட்படுத்தாத அந்த பெண், காரை ஒரு கிலோ மீட்டர் தூரம் செலுத்தி உள்ளார்.

இது குறித்த காணொளியின் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசரின் விசாரணையில், காரை ஓட்டி அந்த பெண்மணியின் பெயர் பிரியங்கா என்பது தெரிய வந்தது. மேலும் கார் பேனட்டில் சிக்கி அந்த நபர் தர்ஷன் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா மற்றும் தர்ஷன் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.

அதில் பிரியங்கா, தன்னிடம் தர்ஷன் மற்றும் அவரின் நண்பர்கள் தவறாக நடக்க முயன்றதாக புகார் அளித்துள்ளார். 

தர்ஷன் தரப்பில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாக பிரியங்கா மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore car accident case 2023


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->