நடுஜாமத்தில் "காஞ்சுரிங்-2" சித்து விளையாட்டு.! புள்ளிங்கோவை புரட்டி எடுத்த காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் யஷ்வந்த்புரம் பகுதியில் நேற்று நள்ளிரவின் போது வெள்ளை நிறுத்தினால் ஆன ஆடைகளை அணிந்து கொண்டு., முகத்தினை தலைமுடியால் மறைத்துக்கொண்டு பேய் போல வேடமிட்டு மர்ம நபர்கள் சுற்றி திரிந்தனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி மக்களை பேய் போல துரத்தி பயம்புறுத்தினர். 

இதனை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி பயந்து ஓட்டம் பிடித்த நிலையில்., அவ்வழியாக வந்த கார் மற்றும் ஆட்டோக்களை இடைமறித்து பயத்தினை ஏற்படுத்தினார். இதனை கண்ட மக்கள் பதறியடித்து செய்வதறியாது திகைத்த நிலையில்., கைகளில் உருட்டுக்கட்டை வைத்துக்கொண்டும் தங்களின் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். 

இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., மப்டி உடையில் காவல் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சமயத்தில் வந்திருப்பது காவல் துறை அதிகாரி என்பதை அறியாத கூட்டம் தனது லீலையை தொடரவே., காவல் துறை அதிகாரி பொதுமக்கள் போல பயப்பிடாமல் விரட்டி பிடித்தார். 

பின்னர் தான் பேய் இல்லை என்றும்., இதனை வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நண்பனை ஒருவர் பிடித்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்களும் விரையவே., ஒட்டுமொத்தமாக 7 புள்ளிங்கோ காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜான் மல்லிக் (வயது 20)., நவீத் (வயது 20)., சஜில் முகமது (வயது 21)., ஷாகிப் (வயது 20)., சையத் நபீல் (வயது 20)., யூசுப் அகமது (வயது 20) மற்றும் முகமது ஆயுப் (வயது 20) ஆகியோர் என்பதும்., இவர்கள் 7 பெரும் வெவ்வேறு கல்லூரிகளில் பயின்று வருவதும் தெரியவந்தது. 

மேலும்., இந்த காட்சிகள் அனைத்தையும் யூடுப் மற்றும் டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் எவ்விதமான அனுமதி மற்றும் முன்னெச்சரிக்கை இல்லாமல் இவ்வாறாக நடந்ததால்., மக்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகியதால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bangalore 7 college students arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->