நேற்று அயோத்தியில் கின்னஸ் சாதனை.! 500 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 500 ஆண்டுகளாக நடைபெறாமல்  இருந்த நிகழ்ச்சி முதன்முறையாக அயோத்தி ராமஜென்ம பூமி பகுதியில் நேற்று 5 லட்சம் தீபங்கள் ஏற்றி தீபோற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை அடுத்து, மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தீபாவளியின் தீபோற்சவம் இந்த மாதம் 12 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, 500 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அயோத்தி ராம ஜென்ம பூமியில் 5 லட்சம் மண் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறவுள்ளது.

ஒரே இடத்தில, ஒரே நேரத்தில்  5 லட்சம் மண் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது புதிய கின்னஸ் சாதனையாக பதியப்பட்டுள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayodhya Diwali celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->