பீஹாரில் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும்; 'ஆக்சிஸ் மை இந்தியா' கருத்துக்கணிப்பு..!
Axis My India poll predicts NDA will win again in Bihar
பீஹாரில் சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் தேஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என 'ஆக்சிஸ் மை இந்தியா' கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 06. 09 ஆம் தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. ஓட்டுகள் எண்ணிக்கை நாளை மறுநாள் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜ, ஐஜத உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேஜ கூட்டணியே ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.
இருப்பினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை ஏற்கவில்லை. அத்துடன், இந்த தேர்தல் கணிப்புகள் பொய்த்து போகும் என கூறியுள்ளன. இந்நிலையில் 'ஆக்சிஸ் மை இந்தியா' நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதிலும் தேஜ கூட்டணி தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி,
தேஜ கூட்டணி : 121 -141 தொகுதிகள்.
மகாகத்பந்தன்: 98 - 118 தொகுதிகள் வரை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி இந்த தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், அதிகபட்சம் 02 இடத்தில் மட்டுமே வெற்றி பெறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2020 தேர்தலில் 43 சதவீத ஓட்டுகள் வாங்கிய தேஜ கூட்டணிக்கு இந்த முறையும் 43 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என்றும், மகாகத்பந்தன் கூட்டணிக்கு 41 சதவீதமும், ஜன் சுராஜ் கட்சிக்கு 04 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என அந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Axis My India poll predicts NDA will win again in Bihar