செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

கொரோனா வைரஸை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. 

கொரோனா வைரஸ் குறைந்த பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதால், மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சமீபத்தில், கொரோனா பாதிப்பு தன்மை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், அசாமில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அமைச்சர்  ஹிமந்தா பிசுவாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல, ஆந்திராவில் செப்டம்பர் 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam govt schools open september 1


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->