மிதக்கும் மக்கள்.. ஆறுமாதம் படகு வாழ்க்கை.. வியப்பூட்டும் தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள நல்பாரி மாவட்டம் பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள கிராமம் மஞ்சுழி. இந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளமானது மாதக்கணக்கில் வடியாமல் இருக்கிறது. இக்கிராமத்தை சார்ந்த மக்களின் வாழ்க்கையானது 6 மாதம் படகில் தத்தளித்தவாறே செல்கிறது. 

வருடம்தோறும் ஜூன் மாதத்தில் பெய்யும் மழையின் காரணமாக கரைபுரண்டு ஓடும் ஆற்றின் நீர் கிராமத்தை மூழ்கடிக்கிறது. கிராமத்தில் வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பினாலும், கிராமத்தை சுற்றிலும் நான்கு திசையிலும் வெள்ளம் வடிய ஆறு மாதங்கள் ஆகும். மேலும், டிசம்பர் மாதம் வரை இந்த கிராமம் தீவு போலவே காட்சி அளிக்கிறது. 

பிற காலங்களில் வயல்களில் கடுமையாக உழைத்து, விளை பொருட்களை சேகரித்து இவர்களின் வாழ்வாதாரம் கடந்து செல்கிறது. ஆறு மாதத்திற்குள் விளை பொருட்களை சேகரிக்க இயலாத பட்சத்தில், அணைத்து உழைப்புகளும் வெள்ளத்திற்குள் மூழ்குகிறது. இதன்பின்னர் அங்குள்ள பிற கிராமங்களுக்கு சென்று தங்களின் வாழ்க்கையை மீன் பிடித்தும், பிற தொழில்கள் செய்தும் நடத்தி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள அணைத்து வீட்டிலும் படகுகள், படகுகளை செய்ய கிராமத்தில் இருக்கும் மரங்களையே உபயோகம் செய்வது, சிறு வயதுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் படகுகளை இயக்க தெரியும் வகையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும், கடந்த 2006 ஆம் வருடத்தில் சிறிய தடுப்பணை கட்ட திட்டம் தீட்டிய நிலையில், எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Floating island village Majuli


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->