அசாம் : மருத்துவமனை மாடியில் இருந்து தவறி விழுந்து டாக்டர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அசாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி அருகே சாங்காரி என்ற இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கட்டிடத்தில் ஏழாவது மாடியிலிருந்து மருத்துவர் ஒருவர் தவறி விழுந்தார்.

இதனையடுத்து அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Doctor dies after falling from hospital floor


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->