வெள்ளத்தால் சிதைந்துபோன அசாம் மாநிலத்திற்கு அடுத்து விடுக்கப்பட்ட பேரதிர்ச்சி இறுதி எச்சரிக்கை.! அச்சத்தின் உச்சத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான பகுதியில் கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளமானது ஏற்பட்டு., சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் செய்வதறியாது திகைத்து உள்ளனர். இந்த நிலையில்., வெள்ளத்தில் சிக்கி சுமார் 43 பேர் தற்போது வரை பலியானதாக நேபாள அரசு அறிவித்தது. 

இதனைப்போன்று பிரம்மபுத்திரா கரைகளில் வசித்து வந்த இந்திய மக்கள் சுமார் 7 பேர் உயிரிழந்ததாக அந்தந்த மாநில அரசுகள் அறிந்துள்ளது. இந்த வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்ட பாதுகாப்பு படையினர் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டு 68 முகாம்களில் தங்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைப்போன்று பல இலட்சக்கணக்கான மக்களை காக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

அசாமில் உள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் முழுமையாக வெள்ள பாதிப்பால் பாதிப்படைந்துள்ள நிலையில்., அங்குள்ள பர்பெட்டா மாவட்டம் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளதாகவும்., அங்குள்ள 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., அங்குள்ள மோரன் மாவட்டத்தில் இருக்கும் 52 கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ள நீரானது புகுந்துள்ளதால்., மக்கள் செய்வதறியாது வீடுகளை விட்டு வெளியேற துவங்கியுள்ளனர். இதுமட்டுமல்லாது அசாம் மாநிலத்தில் உள்ள 10 நதிகளின் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்ததை அடுத்து பெரும் பாதிப்பானது ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வனவிலங்கு பூங்காவில் இருக்கும் விலங்குகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்., வரும் 48 மணிநேரத்தில் அசாமில் அண்டை மாநிலங்கள் மற்றும் மேகாலயா போன்ற பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் கடுமையான அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Brahmaputra river flood rain announced by weather report peoples panic


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->