பெயரெல்லாம் மாத்த முடியாது.. உ.பி முதல்வரின் பேச்சுக்கு கடும் தாக்கு..! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். இதன்போது பேசிய யோகி ஆதித்யநாத், ஐதராபாத் பெயர் மாற்றும் விவகாரத்தினை கையில் எடுத்தார். 

மேலும், உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் பைசாபாத் நகரை அயோத்தி என்றும், அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றியுள்ளோம். ஐதராபாத் நகரை பாக்ய நகர் என்று பெயர் மாற்றம் செய்யலாமே? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். 

இவரது பேச்சு தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி பதிலடி கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், " பாஜக ஐதராபாத் நகருக்கு மற்றொரு பெயரை சூட முடிவு செய்துள்ளது. 

அவர்கள் எங்கு சென்றாலும், அந்நகரின் பெயரை மாற்றம் செய்ய விரும்புகின்றனர். உங்களுக்கு வேண்டும் என்றால் வேறு பெயரை நாங்கள் வைக்கிறோம். ஐதராபாத்க்கு வேறு பெயரை சூட்ட இயலாது. உ.பி முதல்வர் இங்கு வந்து பெயரை மாற்ற ஒப்பந்தம் ஏதும் போட்டுள்ளாரா? " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asaduddin Owaisi Answer to UP CM Yogi Adityanath Tells about Name Change Hyderabad City


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->