டெல்லியில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பரப்ப தமிழ் அகாடமி.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பரப்ப தமிழ் அகாடமி உருவாக்கி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கலை, கலாச்சாரம், மொழி துறை அமைச்சர்  மனிஷ் சிசோடிய வெளியிட்ட அறிவிப்பில், டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினர் என் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடெமிக்கான தனியிடம், அலுவலகங்கள் உள்ளிட்டவை விரைவில் ஒதுக்கப்படும். தேசத்தின் அனைத்து மாநில மக்களும் டெல்லியில் பணிபுரிந்து வருவதால் கலாச்சார செரிவு மிக்க நகரமாக டெல்லி இருந்துவருகிறது. 

தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகின்றனர். தமிழ் மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகையால், தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழிகளை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த அகாடமி மூலம் தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானங்கள் வழங்கப்படும். தமிழ் மக்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும். தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arvind kejriwal announced tamil academy in delhi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->