வீரமரணம் அடைந்த கணவனுக்கு ராயல் சல்யூட்.. ஒருவருடத்திற்கு பின்னர் கணவனின் பணியை ஏற்ற வீரமங்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரகன்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியை சார்ந்தவர் மேஜர் விபூதி கவுண்டி. இவர் இராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற 20 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் சண்டையில் உயிரிழந்தார். இவருடன் மூன்று இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 

விபூதி தனது 35 வயதில் உயிரிழந்த நிலையில், இவரது உடல் டோராடூனிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி மாறியதை செலுத்தப்பட்டது. மேலும், திருமணம் முடிந்த ஒன்பது மாதத்திற்கு உள்ளாகவே கணவரை இழந்த போதிலும், கணவனுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார். மேலும், கணவரின் காதிற்கு அருகே சென்று "ஐ லவ் யூ" என்று கூறியிருந்தது, அங்கிருந்த நபர்களின் சோகத்தை அதிகப்படுத்தியது.  

இந்த துயரம் நடைபெற்று ஒரு வருடம் ஆகும் நிலையில், யாருமே எதிர்பாராத நிலையில், கணவரின் வழியில் நிகிதாவும் இராணுவத்தில் பணியாற்றவுள்ளார். இராணுவ அதிகரிக்கான தேர்வெழுதிய நிகிதா, இராணுவ அதிகாரியின் விதவை வரம்பு அடிப்படையில் வயது வரம்பு தளர்த்தப்பட்டு, எழுத்து தேர்விலும், நேர்முக தேர்விலும் தேர்ச்சி அடைந்துள்ளார். 

இதன்பின்னர் சென்னையில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் அகாடமியில் ஒருவருட பயிற்சியில் சேரவுள்ள நிலையில், இது தொடர்பாக நிகிதா தெரிவித்தாவது, இராணுவத்தில் எனது கணவரின் மனநிலையை நான் அறிய விரும்புகிறேன்.. இதற்காக கடந்த ஒரு வருடம் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். எனது கணவரும் என்னுடன் இருக்கிறார்.. அதுவே எனது பலத்தையும், மன திடத்தையும் அளிக்கிறது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

army officer wife become a army man first training in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->