ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்..! குவியும் பாராட்டுக்கள்..!  - Seithipunal
Seithipunal


நேற்று நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவவலி  ஏற்பட்டிருக்கிறது. மேலும், டெல்லியில் பனிமூட்டம் இருக்கும் காரணத்தினால் ரயில்கள் மிகவும் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது. இதனால் அடுத்த ஸ்டேஷனை அடைய நேரம் எடுக்கும் என்பதால் அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள்.

இதை தொடர்ந்து, ரயிலில் இருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த ரயிலில் ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் இருவர் பயணம் செய்திருக்கிறார்கள் . அவர்கள் இருவருக்கும் இந்தத் தகவல் கிடைக்க உடனடியாகப் பிரசவம் பார்ப்பதற்கான பணிகளை செய்திருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து இந்திய ராணுவம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில், பெண் மருத்துவர்களைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளது.  மேலும் பலரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

army doctor make delivery on train


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->