சிக்னல் இல்லாமலும் பேசிக்கொள்ள ஏர்டெல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் கடலை மன்னர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள ஏர்டெல் நிறுவன பயனாளர்களுக்கு வை-பை அழைப்பு (Wi-Fi calling) வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சமீபத்தில் மொபைல் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்தது. 

இதுமட்டுமல்லாது சில பிளான்களில் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில்., வாடிக்கையாளர்கள் கடுமையான அவதியடைந்தனர். இதனால் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களை கவருவதற்கு தற்போது திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 

airtel, airtel wifi calling,

இதன் அடிப்படையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம் இலவச அன்லிமிட் கால் வசதியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதனைப்போன்று ஜியோ நிறுவனமும் தனது பழைய கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 

இந்த நேரத்தில்., “வோ வைபை” என்கிற பெயரில் ஏர்டெல் நிறுவனத்தின் சார்பாக வை-பை அழைப்பு வசதியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி துவக்க கட்டமாக டெல்லியில் துவங்கப்பட்டுள்ள நிலையில்., சிக்னல் இல்லாத இடத்தில் வை-பை அழைப்பு மூலமாக அதிவேக அழைப்புகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

airtel broadband,

இந்த வசதியை பெற ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் நெட்ஒர்க் மூலமாக இணைப்பை பெற வேண்டும். இந்த வசதி விரைவில் இந்தியா முழுவதும் அறிமுகமாகும் என்றும்., இதில் VOLP என்ற தொழில்நுட்பமானது செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஏர்டெல் வை - பை அழைப்பு வசதியை ஐபோன் XR, 6S, 6S+, 7, 7+, S.E, 8, 8+, X, X.S, X.S.Max, 11, 11 Pro போன்ற அலைபேசிகளிலும்., one plus மொபைல்களில் 7, 7 Pro, 7டி, 7டி Pro மற்றும் போகோ F1, ரெட்மி K 20, ரெட்மி K 20 Pro, சாம்சங் கேலக்ஸி J6, சாம்சங் கேலக்ஸி ஆன் 6 ஆகிய அலைபேசியில் தற்போது பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்., இதற்கு முன்னதாக ஜியோ நிறுவனத்தின் சார்பாக ஹாட்ஸ்பாட் ரவுட்டர் மூலமாக வை-பை அழைப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aritel company announce wifi calling in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->