காஷ்மீர் தாக்குதலால், இந்தியாவே துயரத்தில் மூழ்கியிருந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் செய்த செயல்! கடுப்பான நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று  துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 44 பேர் பலியானர்.

மேலும் பல வீரர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு  நாடு முழுவதும் இதற்கு கடுமையான கண்டங்கள் எழுந்து வருகிறது.இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியர்கள் அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்தியாவே துக்கத்தில் மூழ்கியுள்ள நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் செய்த செயல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நாடு முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் காஷ்மீர் தாக்குதல் குறித்தோ, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தோ எந்த கருத்தும் கூறாமல், பாடகி ஒருவருக்கு திருமண வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். 

இதைக் கண்டநெட்டிசன்கள் பலரும் அங்கு நாட்டிற்காக பலரும் உயிரை விட்டுள்ளனர் .அவர்களை பற்றி எதுவும் கூறாமல் இப்படி செய்கிறீர்களே என கடுமையாக விளாசி வருகின்றனர்.


 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ar rahman scolded by fans for not worry about kashmir attack


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal