மீண்டும் ஒரு ஆழ்துளைக்கிணறு விபத்து! ஆழத்தில் தவித்த 5 வயது சிறுவன்!   - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 

தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை தவறி விழுந்து விட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட, பெற்றோர், உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர், குழந்தை 15 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் குழந்தையை மாநில பேரிடர் மீட்பு குழு உயிருடன் மீட்டது. 

ஆம்புலன்ஸ் உடன் காத்திருந்த மருத்துவ குழு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்ட மாநில பேரிடர் குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் அப்பகுதி மக்கள், குழந்தையின் உறவினர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் நன்றி தெரிவித்துனர். குழந்தை மீட்கப்பட்டது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

another child fell down inside borewell


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->