திருப்பதி அருகே செம்மரம் கடத்த முன்ற 6 பேர் கைது..!  - Seithipunal
Seithipunal


திருப்பதி அருகே  செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 6 பேரை  ஆந்திர காவல்துறை கைது செய்தது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. தனியொரு முதலாளியின் சுயநலத்திற்காக அப்பாவி தமிழர்கள், வறுமையில் வாடுவதை உபயோகம் செய்து, அவர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி சிலர் செம்மரம் கடத்த அனுப்பி வைக்கின்றனர். 

இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், செம்மரம் கடத்த வரும் தொழிலாளர்களை கைது செய்யும் அதிகாரிகள், அவர்களை அனுப்பி வைத்த முதலாளிகளை கைது செய்ததாக தெரியவில்லை. கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தபட்டாலும் செம்மர கடத்தல் தொடர்ந்து நடந்து வருகின்றது.

இந்நிலையில், திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் காவல் துறையினர் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது செம்மரகட்டைகளை சுமந்து சிலர் செல்வதை காவல்துறையினர் கண்டனர். அவர்களை பிடிக்க முன்ற பொழுது சிலர் வனபகுதிகளில் மறைந்து தப்பியோடிவிட்டனர். 

இது குறித்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு எஸ். பி. சுந்தர ராவ் கூறுகையில், கைதுசெய்யபட்ட 6 பேரில் இருவர் 18 வயது நிரம்பாதவர்கள். அதலால் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பபட்டனர் எனவும், மற்றவர்களிடம் நடந்த விசாரணையில் ஒரு குழுவாக செம்மரம் வெட்ட வந்தாக தெரிவித்துள்ளனர். இவர்கள் திருண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். தப்பியோடியவர்களை தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Tirupati Police Arrest Red Sandalwood Smuggling Coli workers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->