ஆடம்பர செலவுக்கு பணம் கொடுக்காத காதல் மனைவி கொலை.. உடல் பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. கொடூரன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


ஆடம்பர செலவுக்கு பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த மனைவியை கணவன் எரித்துக்கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி புங்கனூர் அலிபிரி சாலை பகுதியை சார்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவரது மனைவி புவனேஸ்வரி. கடந்த மாதம் 22 ஆம் தேதி புவனேஸ்வரி திடீரென மாயமான நிலையில், திருப்பதி அரசு மருத்துவமனை அருகேயுள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

சம்பவ இடத்திற்கு அருகேயிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்கையில், புவனேஸ்வரியின் கணவர் ஸ்ரீ காந்த் ரெட்டி புவனேஸ்வரியை கொலை செய்து சூட்கேசில் வைத்து வனப்பகுதிக்கு எடுத்து வந்தது அம்பலமானது. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த திருப்பதி காவல் துறையினர், ஸ்ரீகாந்த் ரெட்டியை தேடி வந்தனர். கடப்பாவில் அவர் தலைமறைவாகவே, கடப்பாவுக்கு தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், " கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பை நான் இழந்தேன். ஆனால், எனக்கு ஆடம்பரமாக இருக்க பிடிக்கும். இதற்காக செலவுக்கு மனைவியிடம் பணம் கேட்டு வந்த நிலையில், அவ்வப்போது எனது வற்புறுத்தலால் சிறிதளவு பணம் கொடுத்து வந்த மனைவி, சம்பவத்தன்று பணம் கொடுக்க மறுத்தார். 

இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பிரச்சனை சரியாகி நானும் அமைதியாக இருந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி மீண்டும் மனைவியிடம் பணம் கேட்டேன். இதன்போது, எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

இதனையடுத்து, இரவு தூங்கிக்கொண்டு இருந்த மனைவியின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்தேன். பின்னர், யாருக்கும் தெரியாமல் உடலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு வைத்து எரித்தேன். ஆனால், எப்படியோ என்னை காவல் துறையினர் கைது செய்துவிட்டனர் " என்று தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பான தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Tirupati Alipiri Wife Bhuvaneswari Murder by Husband Sree Kanth Reddy 3 July 2021 Invest Update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->