குதிரையை கொரோனாவாக சிங்காரித்து விழிப்புணர்வு செய்யும் காவல் அதிகாரி.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் பெரும் பிரச்சனையாக கரோனா வைரஸ் பிரச்சனை இருந்து வருகிறது. மருத்துவத்தில் சிறப்பாக விளங்கும் மேலை நாடுகள் கூட கரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் விழிபிதுங்கி வருகிறது. 

இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மாநிலங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டது. மேலும், அந்தந்த மாநிலத்தில் இருக்கும் மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டது. 

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கரோனா பரவுவதை கட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், மக்களின் நடமாட்டத்தை கண்காணித்து எச்சரித்து அனுப்ப காவல் துறையினர் தேவையான நடவடிக்கையை அடுத்து, மக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கரோனா தொடர்பாக காவல் அதிகாரி குதிரை மீது கரோனா வைரஸ் போன்று அச்சுப்பதித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தின் மண்டல் பகுதியில் காவல் உதவி ஆய்வாளராக செயல்பட்டு வருபவர் மாருதி சங்கர். 

இவர் கரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், குதிரையின் மீது கரோனா வைரஸ் போன்று அச்சுப்பதித்து, அதன் மூலமாக மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra pradesh police awareness about corona virus using horse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->