தாய்மாமனுக்கு தாரமான பள்ளி சிறுமி., புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை, ஆசிரியர்கள்.! போனது உயிர்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் : நகரி பகுதிக்குட்பட்ட வரதய்யா பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சூலூர்பேட்டையை சேர்ந்த 30 வயது தாய்மாமனுக்கு சிறுமியை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர்.

ஆனால் இந்த திருமணத்தில் சிறுமிக்கு துளியளவும் ஈடுபாடு, விருப்பம் இல்லை. தான் படிக்க விரும்புவதாகவும், தற்போது எனக்கு திருமணம் தேவையில்லை என்றும் சிறுமி மறுத்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாத பெற்றோர்கள் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

தனக்கு குழந்தை திருமணம் நடக்க உள்ளதை ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஆசிரியர்கள் உட்பட அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள் யாருமே சிறுமியின் குழந்தை திருமணத்தை தடுக்க முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இது அனைத்தையும் மீறி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தாய்மாமனுடன் சிறுமிக்கு கட்டாய குழந்தை திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு தாய்மாமன் வீட்டுக்குச் சென்ற சிறுமி அவருடன் வாழ பிடிக்காமல் மீண்டும் தாய் வீட்டிற்கு வந்து பள்ளிக்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில், மீண்டும் சிறுமியை கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டுமென அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வரதபாளையம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்த தற்கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுக்க கோரி ஆசிரியர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் இடம் புகார் அளித்தும், ஒரு உயிர் போனதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andra nakari school girl child marriage issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->