ஆணவப்படுகொலைக்கு காதல்கணவரை பலிகொடுத்த அம்ருதா.!வைரலாகும் குழந்தையுடன் கொஞ்சி மகிழும் நெகிழ்ச்சி வீடியோ!! - Seithipunal
Seithipunal


தெலுங்கனா மாநிலத்தைச் சேர்ந்தவர் அம்ரூதா,இவர் வேறு சமூகத்தை சேர்ந்த பிரணவ் பெருமுல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தங்களை எதிர்த்து வேறு சமூக இளைஞனை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் அம்ரூதாவின் குடும்பத்தார்கள் பிரணவ்- அம்ருதா தம்பதியினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அம்ருதாவினை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது நபர் ஒருவர் அரிவாளால் பிரணவை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார் .

இதனைத்தொடர்ந்து விசாரணையில் ரியல் எஸ்டேட் பிரமுகரான அம்ரூதாவின் தந்தை தான் கூலிப்படை வைத்து இந்த கொலையினை செய்தார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த அம்ருதா பிரணவ் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்தார்.

இதனை தொடந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்ருதாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நிகலன் பிரணவ் என்றும் பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் ஆணவக்கொலையால் தனது காதல்கணவரை இழந்த அம்ருதா தனது குழந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

இந்நிலையில் தற்போது அம்ரூதா தன் குழந்தையை  கொஞ்சும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. . இதனை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

English Summary

amrutha playing eith baby viral video


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal