காங்கிரசின் பதிலை, அப்படியே திருப்பி கூறி பல்ப் கொடுத்த அமித்ஷா..!  - Seithipunal
Seithipunal


முன்னதாக அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, இன்று ரஃபேல் வழக்கு, சபரிமலை வழக்கு, ராகுல்காந்தி வழக்கு என்று முக்கியமான பல வழக்குகளுக்கு ஒரே நாளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ரபேல் போர் விமான வழக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை, என்று கூறி டிசம்பர் 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு மறுசீராய்வு மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா,ரபேல் தீர்ப்பு மூலமாக மோடி அரசானது ஊழல் இல்லாத வெளிப்படையான அரசு என்பது நிரூபணமாகி இருக்கிறது. அயோத்தி தீர்ப்பு வெளியான போது காங்கிரஸ் தரப்பில் அயோத்தி தீர்ப்பின் மூலமாக இந்த விவகாரத்தை பாஜக போன்ற கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து அரசியலாக்குவதற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, என்று கூறினார்கள்.

அதுபோலவே, காங்கிரஸின் ஊழல் குற்றச்சாட்டுக்கு ரபேல் தீர்ப்பு சரியான பதிலடி." என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amit shah replies to congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->