அமேசோனியா -1 உட்பட 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தும் தேதி அறிவிப்பு - இஸ்ரோ.! - Seithipunal
Seithipunal


பி.எஸ்.எல்.வி-சி 51 அமேசோனியா -1 மற்றும் 20 இணை செயற்கைக்கோள்களை பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இந்திய தகவல் தொழில்நுட்பம், வானிலை தகவல்கள், இராணுவ பயன்பாடுகளுக்கு என பல்வேறு செயற்கை கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. மேலும், வணிக ரீதியாகவும், இந்தியாவிற்கு உதவும் வகையிலும் பல்வேறு செயற்கை கோள்களையும் தயாரித்து விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " பி.எஸ்.எல்.வி-சி 51 அமேசோனியா -1 மற்றும் 20 இணை செயற்கைக்கோள்களை பிப்ரவரி 28, 2021 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி-சி 51 / அமசோனியா -1 என்பது விண்வெளித் துறையின் கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) அமைப்பின் முதல் வணிக பணி ஆகும். ஸ்பேஸ்ஃப்லைட் அமெரிக்காவுடன் வணிக ஏற்பாட்டின் கீழ் என்.எஸ்.ஐ.எல் இந்த பணியை மேற்கொள்கிறது.

அமசோனியா -1 என்பது விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் (INPE) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் அமேசான் பகுதிகளில் காடுகள் அழிப்பு விஷயங்களை கண்காணிப்பதற்கும், பிரேசில் நாடுகளில் பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் உதவி செய்து கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்.

20 இணை செயற்கைக்கோள்களில் ஒன்று இஸ்ரோவிற்கு (ஐ.என்.எஸ் -2 டி.டி) சொந்தமானது. ஐ.என்-ஸ்பேஸில் இருந்து நான்கு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது " என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazonia 1 Including 20 Satellites scheduled 28 Feb 2021 to Launch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->