அலகாபாத் வங்கி இழப்பு ரூ.2,114 கோடி.!! - Seithipunal
Seithipunal


பொதுத்துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கி, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.2,114 கோடியை நிகர இழப்பு கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.1,823 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு அதிகரித்துள்ளது. 

 இதே காலத்தில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.534 கோடியில் இருந்து ரூ.632 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மொத்த வாராக்கடன் 17.53 சதவீதத்தில் இருந்து 19.05 சதவீதம் அதிகரித்துள்ளது. 

அதே சமயம் நிகர வாராக்கடன் 7.96 சதவீதத்தில் இருந்து 5.98 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது அலகாபாத் வங்கி பங்கு ரூ.27 20-க்கு கைமாறியது.

வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.27.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.95-க்கு ம் சென்றது. இறுதியில் ரூ.26.05-ல் நிலை கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

allahabad bank loss 2114 crore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->