இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட ரஃபேல் விமானம்! நடத்தப்பட்ட பூஜை! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது. இந்தியர்கள் பலரும் இந்த போர் விமானங்களை கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர்.

இந்நிலையில், இந்தப் போர் விமானங்கள் இன்று அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானம் முறைப்படி இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி, முப்படைத் தளபதிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மதப்படி பூஜை நடத்தப்பட்டது. சீன - இந்திய எல்லையில் மிகவும் பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவும் நிலையில், இந்த நிகழ்வு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த போர் விமானங்கள் இணைப்பு நிகழ்ச்சிக்குப் பின் பிரான்ஸ் அமைச்சருடன், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all god prayer for rafel fighter jet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->