நகைக்கடன் உட்பட அனைத்து கடன்களையும் அதிரடியாக நிறுத்தி வைத்த வங்கி.!  - Seithipunal
Seithipunal


மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தமிழகத்தில் இருக்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நகை கடன், உட்பட எந்தவிதமான கடன்களும் வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முதல், நகர, மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் மற்றும் ஏழை எளியோருக்கு நகை கடன்‌ வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடப்பதாக கூறி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இதனைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் வரையில் எந்தவிதமான கடன்களும் வழங்கப்பட கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்கப் படுவதில்லை என்று விவசாயிகள் மற்றும் ஏழை எளியோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு விவசாய கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவி குழு கடன்‌, மத்திய கால கடன் என அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All bank loans are stopped from co operative bank 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->