பயங்கரவாத தொடர்பால் பணி நீக்கம் செய்யப்பட்ட அல் பலாஹ் மருத்துவ கல்லூரி டாக்டர்: விசாரணையில் அம்பலம்..!
Al Falah Medical College doctor dismissed for terrorism links under investigation
தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அல் பலாஹ் மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய மற்றொரு டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். வெடிமருந்து விவகாரத்தில் ஏற்கனவே, 03 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மற்றொரு டாக்டரின் பெயரும் வெளியாகியுள்ளது. இவர் காஷ்மீரில் பயங்கரவாத தொடர்பு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
நிசார் உல் ஹசன் என்ற குறித்த டாக்டர், பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவ கல்லூரியில் தங்கி பணியாற்றியதுடன் அங்கேயே படித்தும் வந்துள்ளார். டில்லியில் கார் வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை மறுத்துள்ள அல் பலாஹ் தொண்டு நிறுவனம், கல்லூரி வளாகத்தில் தான் அவர் உள்ளார் என்றும், அவரிடம் பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தியதாக தெரியந்துள்ளது. இருப்பினும், நிசார் உல் ஹசன் கல்லூரி வளாகத்தில் இல்லை எனவும், அவரை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிசார் உல் ஹசன்
காஷ்மீரின் பாரமுல்லாவின் சோபோர் பகுதியைச் சேர்ந்த நிசார் உல் ஹசன், காஷ்மீர் டாக்டர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். இவர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்துள்ளார். ஸ்ரீநகரில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, பயங்கரவாத தொடர்பு காரணமாக 2023-ஆம் ஆண்டு டிஸ்மிஸ் செய்து ஆளுநர் உத்தரவிட்டார். இதன் பிறகே அவர் ஹரியானாவில் உள்ள அல்பலாஹ் மருத்துவ கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தொடர்புடைய வெடிமருந்து விவகாரத்தில் இவருக்கு பங்கு இருக்கும் என உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிசார் உல் ஹசன் தலைமறைவானதைத் தொடர்ந்து அவரது மகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Al Falah Medical College doctor dismissed for terrorism links under investigation