அடுத்த மாதம் வரை இந்தியாவுக்கு தடை விதித்த துபாய் அரசு! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா உலகின் இரண்டாம் இடத்தில உள்ளது.  

இதுவரையில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் தங்கள் நாட்டிலும் அதிகம் பரவுவதாக கருதிய துபாய் அரசு, இந்தியாவில் இருந்து வரும்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் துபாயில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை விதித்துள்ளது. அதாவது இந்த தடை அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரை உள்ளது.  இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 2 பேர் பயணம் செய்ததால் இந்த நடவடிக்கையை துபாய் அரசு எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் அரசு விதித்த தடையால் அந்த நாட்டிற்கு செல்லும் மாணவர்கள், ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

airindia flight not enter in dubai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->