மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தலைநகரம்.! மக்கள் கடும் அவதி.! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றினால் ஏற்படும் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் இருக்கின்ற விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படும் போது வருகின்ற புகையாலும் மற்றும் வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து கொண்டே இருக்கிறது.

மேலும், காற்று மாசை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மாசு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் மக்களும் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

அதிக அளவிலான புகையை வெளிப்படுத்துகின்ற, மோட்டார் வகையான வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது ஏராளமான பட்டாசுகள் வெடிக்கபட்டது, டெல்லி மற்றும் அருகில் உள்ள நொய்டா நகரில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான நிலையை எட்டியது.

நேற்று இரவு நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306, நொய்டாவில் 356 என மிக மோசமான நிலையில் இருந்தது. அரியானா மாநிலம் குருகிராமத்தின் என்ஐஎஸ்இ கவால் பகாரி பகுதியில் காற்றின் தரக் குறியீடு 279 ஆக இருந்தது. இது மோசமான அளவை குறிப்பதாகும். 

காற்றின் மாசு அதிகரித்ததால் டெல்லியில் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air pollute worst in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->