கரோனாவை தடுக்க மாற்றுமுறை சோதனையில் உள்ளது.. எய்ம்ஸ் மருத்துவர் நம்பிக்கை தகவல்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க பல்வேறு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பிளாஸ்மா சிகிச்சை என்று அழைக்கப்படும் சிகிச்சை முறைக்கு உலக நாடுகள் தயாராகி வருகிறது. இந்த மருத்துவ சிகிச்சை முறைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கேரள மாநிலத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரன்தீப் குளோரியா தெரிவித்த சமயத்தில், கரோனா நோயாளிகளுக்கு மாற்று பிளாஸ்மா முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 

இதன்மூலம், கரோனா நோயாளி குணமடையும் பட்சத்தில், அவரின் உடல் நோய்த்தொற்றை எதிர்த்து போரிட தயாராகி இருக்கும். நோயினை எதிர்த்து போரிடும் ஆண்டிபாடிகளை இது இரத்தத்தில் உருவாக்குகிறது. குணப்படுத்தப்ட்ட நபரின் மூலமாக, அவரின் இரத்தத்தை வைத்து பிற நோயாளிகளுக்கு இதனை பயன்படுத்தலாம். 

பாதிப்பில் இருந்து மீண்ட நபருக்கு ஆண்டிபாடி அதிகளவு இருந்தால், இரத்த தானம் செய்ய கூறி ஆலோசனை வழங்கலாம். இந்த ரத்தத்தின் மூலமாக பிளாஸ்மாவை எடுத்து நோய் பாதித்த நபருக்கு மாற்றி சிகிச்சை அளிக்கலாம். இதுகுறித்து தற்போது இந்தியாவின் பல ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIMS doctor said about Antibiotic for corona


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->